Oil Lamp | எண்ணெய் விளக்கு
About This Collection
Oil Lamp | எண்ணெய் விளக்கு
Material | மூலப்பொருள்
English: Brass
தமிழ்: பித்தளை
Used For | பயன்பாடு
English:
The Oil Lamp is used for burning oil with a cotton wick during Hindu religious worship, temple rituals, and household prayers. Lighting the lamp marks the beginning of worship and creates a sacred and peaceful atmosphere.
தமிழ்:
எண்ணெய் விளக்கு இந்துச் சமய வழிபாடுகள், கோவில் சடங்குகள் மற்றும் வீட்டு பூஜைகளில் எண்ணெய் ஊற்றி திரி ஏற்றி விளக்கேற்றப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய வழிபாட்டுப் பொருளாகும். விளக்கேற்றுவது வழிபாட்டின் தொடக்கத்தைக் குறிக்கும் அடையாளமாகவும், புனிதமான மற்றும் அமைதியான சூழலை உருவாக்குவதற்குமான முக்கிய வழிபாட்டு முறையாகவும் கருதப்படுகிறது.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: 16th Century – Present Day
தமிழ்: 16ம் நூற்றாண்டு – இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The Oil Lamp has been an integral part of Tamil Hindu religious traditions for centuries. It symbolises light, purity, wisdom, and the removal of darkness and ignorance. Widely used in temples, festivals, and household worship, the Oil Lamp continues to represent devotion, prosperity, and divine blessings. Today, antique Oil Lamps are preserved as important heritage artefacts that reflect the religious beliefs, traditional craftsmanship, and rich cultural heritage of Tamil communities.
தமிழ்:
எண்ணெய் விளக்கு என்பது பல நூற்றாண்டுகளாக தமிழர் இந்து சமய மரபின் இன்றியமையாத புனித வழிபாட்டுப் பொருளாக இருந்து வருகிறது. இது ஒளி, தூய்மை, ஞானம் மற்றும் இருள், அறியாமை நீங்குவதைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. கோவில்கள், திருவிழாக்கள் மற்றும் இல்ல வழிபாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய் விளக்கு, பக்தி, செழிப்பு மற்றும் தெய்வீக அருளின் சின்னமாக இன்றளவும் விளங்குகிறது. இன்று பழமையான எண்ணெய் விளக்குகள், தமிழர் சமய நம்பிக்கைகள், பாரம்பரிய உலோகக் கைவினைத் திறன் மற்றும் வளமான கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முக்கிய மரபுடைமைப் பொருட்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.
உபயம்: குலசேகரம் கீதார்த்தனன்