Clay Pot | மண் பானை
About This Collection
Clay Pot | மண் பானை
Material | மூலப்பொருள்
English: Fired Clay
தமிழ்: சுட்ட களிமண்
Used For | பயன்பாடு
English:
Used for cooking rice, curries, soups, and other traditional foods. The clay pot distributes heat evenly, enhancing the natural flavour of food.
தமிழ்:
சோறு, குழம்பு, கறி, கஞ்சி மற்றும் பல பாரம்பரிய உணவுகளைச் சமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. சுட்ட களிமண் பானை வெப்பத்தை சமமாகப் பரப்புவதால் உணவின் இயற்கைச் சுவை மேம்படும்.
Period of Use | பயன்படுத்தப்பட்ட காலம்
English: Ancient Period – Present Day
தமிழ்: பண்டைய காலம் முதல் இன்றுவரை
Historical Significance | வரலாற்று முக்கியத்துவம்
English:
The Clay Pot has been an essential utensil in households for thousands of years. Handmade from fired clay by traditional potters, it reflects the rich pottery heritage of Tamil communities. Even today, it is valued for preserving the authentic taste of traditional cuisine and remains an important symbol of Tamil culinary culture.
தமிழ்:
மண் பானை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இல்லங்களில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான சமையல் பாத்திரமாகும். பாரம்பரிய குயவர்களால் சுட்ட களிமண்ணில் கைவினையாக உருவாக்கப்பட்ட இப்பானை, தமிழர் மண்பாண்டக் கலை மரபையும் சமையல் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது. இன்றும் பாரம்பரிய உணவுகளின் இயற்கைச் சுவையைப் பாதுகாக்கும் சிறப்பினால், தமிழர் உணவுக் கலாசாரத்தின் முக்கிய அடையாளமாக மதிக்கப்படுகிறது.
Donated by | உபயம்
English: Kulasekaram Geetharthanan
தமிழ்: குலசேகரம் கீதார்த்தனன்